Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டி கலக்கும் பிக்பாஸ் முகேன் ராவ்… தெறிக்கவிடும் ‘வேலன்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

பிக் பாஸ் முகேன் ராவ் நடிப்பில் உருவாகி வரும் வேலன்  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் முகேன் ராவ் . இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த முகேன் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார் . இதையடுத்து இவர் வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் வெற்றி படத்தில் ஹீரோவாக நடித்தார் . இந்த படத்தில் அனுகீர்த்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து முகேன் தனது இரண்டாவது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். வேலன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கவின் மூர்த்தி.கே இயக்குகிறார் .

இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபு, தம்பி ராமையா, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்நிலையில் வேலன் படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. வேஷ்டி சட்டையில் செம ஸ்டைலாக முகேன் ராவ் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இந்த போஸ்டரை பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |