Categories
உலக செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் அமைதியை கடைபிடியுங்கள் … அமெரிக்கா அறிவுரை ..!!

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் காஷ்மீர் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் இரு நாடும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும்  கூறினார் . 

காஷ்மீர் பிரச்சினை என்பதை இந்தியா பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு பிரச்சினை என்ற தங்களது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் காஷ்மீர் பிரச்சனையில் இருதரப்பு பேச்சுவார்த்தை உதவ தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஏற்கனவே தெரிவித்த நிலையில் , அது இரு தரப்பு பிரச்சனை என்றும் காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தானுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இந்தியா  தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Image result for america trump

இந்நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் இறுதியில் காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதனைத தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸிடம் காஷ்மீர் தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் உள்ளதா என கேள்வி எழுப்பபட்டது.

Image result for india vs pakistan army

அப்போது அவர் மாற்றம் இல்லை என்றும் காஷ்மீர் பிரச்சினைக்கு மூன்றாவது நபர் மத்தியசயமின்றி இந்தியாவும் பாகிஸ்தான் தீர்வு காண வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றார். மேலும் இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Categories

Tech |