Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எப்பவுமே இதான் நடக்குது” விரக்தியில் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… திருச்சியில் நடந்த சோகம்…!!!

கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் சலவை தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவம்பூர் பகுதியில் இருக்கும் ராமலிங்கம் காலனியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சலவைத் தொழிலாளி ஆவர். இந்நிலையில் வடிவேலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வடிவேலு திருப்பதி நோக்கி செல்லும் விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |