ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மக்களவையில் காஷ்மீரை காஷ்மீர் யூனியன் பிரதேசம் , லடாக் யூனியன் பிரதேசம் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது.இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலும் பின்னர் மக்களவையிலும் நடந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு அதற்க்கு ஒப்புதல் பெறப்பட்டது.இதன் தொடர்ச்சியாக அந்த இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்ட உடன் குடியரசுத் தலைவரின் கையொத்துக்காக மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது.
இந்நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு கையொப்பமிட்டு தனது ஒப்புதலை அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு புதிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்டசபை கொண்டதாகவும் , லடாக் யூனியன் பிரதேசம் சட்டசபை இல்லாமலும் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.ஜம்மு காஷ்மீர் தேவைப்படும் போது மாநிலமாக மாற்றப்படும் என்று அமித் ஷாவும் பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.