Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS KKR : அதிரடி காட்டிய கொல்கத்தா பவுலர்கள் ..! 124 ரன்களை கொல்கத்தாவிற்கு…வெற்றி இலக்காக வைத்த பஞ்சாப் …!!!

அதிகபட்சமாக ஜோர்டான் 30 ரன்கள் மற்றும் மயங்க் அகர்வால் 31 ரன்களை எடுக்க  பஞ்சாப் அணி 123 ரன்களை குவித்துள்ளது .

14 வது  ஐ.பி.எல் தொடரின் , 21 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி   மைதானத்தில் நடக்கிறது . இதில்  டாஸ் வென்ற  கொல்கத்தா அணி , பீல்டிங்கை  தேர்வு செய்ததால் , பஞ்சாப் கிங்ஸ்  பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக கே.ல்.ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர் .இதில் கே.ல்.ராகுல் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெயில் 0 ரன் எடுத்து அவுட் ஆனார் .

அடுத்ததாக களமிறங்கிய தீபக் ஹூடா 1 ரன் , மயங்க் அகர்வால் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பிறகு பூரன்  19 ரன்கள்  ,மொய்சஸ் 2 ரன்கள் , ஷாருக் கான் 13 ரன்கள் , ஜோர்டான் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் . இறுதியாக பஞ்சாப்  அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை குவித்துள்ளது . 124 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கொல்கத்தா அணி விளையாடுகிறது .

 

Categories

Tech |