சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் வாத்தியார் மடம் போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கு அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு சென்று பார்த்த போது மது விற்பனை நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் வெள்ளையாபுரம் பகுதியில் வசிக்கும் பிச்சை பாண்டியன் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.