மாதவிடாய் காலங்களில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா என்ற கேள்விக்கு டாக்டர் விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையின் அடிப்படையில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு முறை குறித்தும் தடுப்பூசியின் பயன்பாடு குறித்தும் நிதி ஆயோக் மருத்துவர் வி.கே.பால் விளக்கமளித்துள்ளார். அப்போது அவரிடம் மாதவிடாய் காலத்தில் பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா என்ற கேள்வியை கேட்டனர் . இதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் மாதவிடாய்க்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.
மேலும் தாராளமாக மாதவிடாய் காலங்களில் பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் அதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார். இதனைக் காரணம் காட்டி தடுப்பூசி போடுவதை தள்ளி போட வேண்டாம் என்றும் தெரிவித்தார். மருத்துவர் அளித்த விளக்கம் சமூகவலைதளங்களில் பரவிய வதந்திக்கு ஒரு முற்றுப் புள்ளியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது .
.