Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை கேட்டதுக்கு இப்படி பண்ணிட்டானுங்க..! தொழிலாளி பரபரப்பு புகார்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே கூலித்தொழிலாளியை மிக மோசமாக தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொத்தகணவாய்பட்டியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதை குமாரிடம், அதே பகுதியில் வசித்து வரும் மேகலாவின் உறவினரான கூலித்தொழிலாளி செல்லையா தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த குமார் அவருடைய தாத்தா சின்னக்காளை, அவரது தந்தையான மற்றொரு செல்லையா ஆகிய 3 பேரையும் சேர்த்து கொண்டு கூலித் தொழிலாளியான செல்வத்தை சரமாரியாக தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இது குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் செல்லையா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |