நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கு மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் திறக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே கொரோனா தீவிரமாக பரவி வரும் சூழ்நிலை காரணமாக கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிகள் நடக்குமேயானால் தமிழக மீண்டும் போர்க்களமாக மாறும் என்று எச்சரித்துள்ளார் சீமான். இத்தகைய செயல் பச்சை துரோகம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.