திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அமலில் இருந்த முழு நேர ஊரடங்கை மீறிய 1,326 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழுநேர ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளும் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் காவல்துறையினர் ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முக கவசம் அணியாத 392 பேர் மீதும், தேவை இல்லாமல் வெளியே சுற்றித்திரிந்த 880 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 54 பேர்கள் மீதும் என மொத்தம் 1,326 பேர் மீது நேற்று முன்தினம் ஒரேநாளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.