திண்டுக்கல்லில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பையில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து சென்றதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்குவிலாஸ் இறக்கம் அருகே நேற்று முன்தினம் காலையில் சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு சென்றுவிட்டனர். அதன் பின் சிறிதுநேரத்தில் அப்பகுதி முழுவதும் தீ பரவியது.
இதனால் அந்த சாலை புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அதன்பின் இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் குப்பையில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.