Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! ஆய்வில் சிக்கிய நிறுவனங்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 6 வணிக நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க சுகாதார துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குருசாமி, திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் வணிக நிறுவனங்கள் மற்றும் தியேட்டர்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 6 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் மொத்தம் ரூ. 21,600 அபராதம் விதித்தனர்.

Categories

Tech |