Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு “1,44,000 லிட்டர் ஆக்சிஜன்” வழங்கினோம்…. அதனால் கட்டாயம் இதை செய்யணும்…. மருத்துவமனையின் குறிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாக்பூரை சேர்ந்த மருத்துவமனை ஒன்றில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் குணமடைந்து செலகையில் மருத்துவமனை சார்பாக குறிப்பு ஒன்று எழுதி கொடுக்கப்பட்டது. அதில் நீங்கள் குணமடைய  1,44,000 லிட்டர் ஆக்சிஜனை வழங்கியுள்ளோம் . அதற்கு நன்றி செலுத்தும் விதமாக 10 மரக் கன்றுகள் நட்டு ஆக்ஸிஜனை இயற்கைக்கு திருப்பி கொடுத்துவிடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

Categories

Tech |