Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நள்ளிரவு முதல்…. மத்திய அரசு பரபரப்பு உத்தரவு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம் என மத்திய அரசு பரபரப்பு உத்தரவை அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்தில் 50% இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மக்கள் வீட்டிற்குள் இருந்தாலும் முக கவசம் அணிவது நல்லது. தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தவிர்க்கவும். வெளியாட்களை வீட்டிற்குள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளது.

Categories

Tech |