அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 41 ரன்கள் மற்றும் கேப்டன் மோர்கன் 45 ரன்களைக் குவிக்க , 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது .
நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற , 21 வது லீக் போட்டியில் ,பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி , பீல்டிங்கை தேர்வு செய்ததால் , பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக கே.ல்.ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர் .இதில் கே.ல்.ராகுல் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெயில் 0 ரன் எடுத்து அவுட் ஆனார் .அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் .அதிகபட்சமாக ஜோர்டான் 30 ரன்கள் , மயங்க் அகர்வால் 31 ரன்கள் எடுக்க ,இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்தது .
அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 124 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிதிஷ் ரானா டக் அவுட்டாக ,சுப்மன் கில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் தொடக்கத்திலேயே கொல்கத்தா அணி தடுமாறியது. அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிவரை கேப்டன் மோர்கன் ஆட்டமிழக்காமல், 45 ரன்களைக் குவித்தார். இறுதியாக கொல்கத்தா அணி 16.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா அணி 2-வது வெற்றியை கைப்பற்றியது.