Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… பொதுமக்கள் ஒத்துழைப்பு குடுங்க… சுகாதாரத்துறையினர் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஒற்றை இலக்க எண்ணாக பரவி வந்த தொற்று பாதிப்பு தற்போது மூன்றாம் இலக்க எண்ணை எட்டியுள்ளது. அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும். மேலும் முக கவசம் உயிர் கவசம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும். இதையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி செல்பவர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை கடைபிடித்தால் நாம் கொரோனா தொற்றிலிருந்து விடுபடலாம். எனவே பொதுமக்கள் அனைவருமே கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |