Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நான் இன்னும் போடவே இல்ல…. குறுஞ்செய்தியால் பரபரப்பு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!!

சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு முன்பே மூதாட்டியின் செல்போனுக்கு தடுப்பூசி போட்டதாக குறுஞ்செய்தி வந்ததால்ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை தடுக்கும் முறையில் தற்போது அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர்  அப்பபகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போட சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பணியாளர்கள் இணையதளத்தில் பெயரை பதிவு செய்து விட்டு வரும்படி கூறியுள்ளனர்.

இதனால் கீதா இணையதளத்திலும் பதிவு செய்து விட்டு மீண்டும் கிச்சிப்பாளையம ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிறிது நேரம் காத்திருந்தார். அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதைப் படித்துப் பார்த்த போது அதில் அவர் கருங்கல்பட்டியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கீதா அங்கிருந்த நர்சுகளிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ஏதோ தவறு நடந்துள்ளது என கூறியுள்ளனர்.

இதனையடுத்து மூதாட்டி தடுப்பூசி  போடும் படி கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த நர்சுகள் தடுப்பூசி போட முடியாது என்று கூறியுள்ளனர். இதுக்குறித்து அங்கிருந்த நர்சுகள் அதிகாரிக்கு தகவல் தெரிவித்த போது அவர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |