Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீங்கள் மாட்டிக்கொள்ளவில்லை! பாதுகாப்பாக இருக்கிறீர்கள்’… கொரோனா கட்டுப்பாடு குறித்து பிரபல நடிகை டுவீட்…!!!

கொரோனா கட்டுப்பாடு குறித்து நடிகை நதியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை நதியா கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதைத் தொடர்ந்து இவர் நிலவே மலரே, உயிரே உனக்காக, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் . இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இதன் பின் நதியா கடந்த 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

https://twitter.com/ActressNadiya/status/1386272453404479488

இதையடுத்து இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீஎன்ட்ரீ கொடுத்தார். தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நதியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கொரோனா ஊரடங்கு குறித்து ‘நீங்கள் வீட்டில் மாட்டிக்கொள்ளவில்லை! நீங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்’ என பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |