Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆறுகளை சீரமைக்கும் பணி…. தரமாக மேற்கொள்ள வேண்டும்…. வலியுறுத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி….!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆறுகளை சீரமைக்கும் பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, பூண்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் ஆறு சீரமைப்புப் பணிகளை இந்திய கம்யூனிஸ்ட் வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமையில் பூதலூர் ஒன்றிய கவுன்சிலர் லதா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கூறுகையில் “காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை தரமாக செய்ய வேண்டும். மேலும் வெளிப்படைத் தன்மையோடு நடைபெற வேண்டும். இந்த பணிகளை கண்காணித்து முறையாக செயல்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாய சங்கத்தினர், விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்து தரவேண்டும்.

மேட்டூர் அணை திறப்பு தொடங்கும் முன்பாக கீழ் காவிரி வடிநில வட்டத்தில் உள்ள வாய்க்கால்களின் கரைகளை  பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல், ஏரிகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும். மேலும் பாசன அமைப்புகள் கட்டுமானம் மற்றும் கட்டுமானம் இல்லாத பகுதிகளை உடனே மேம்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக பராமரிக்க வேண்டும்” என்று கூறினார்.

Categories

Tech |