Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

22 வருசத்துக்கு பிறகு…. வைதீஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழா…. 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது….!!

வைதீஸ்வரன் கோவில் குடமுழுக்கையொட்டி 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு கால பூஜைகள் நடைபெற்றுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இப்போது தனி சன்னதியில் செல்வ முத்துக்குமார சுவாமி, நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். இந்த கோவிலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 29-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

இதனால் 147 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றது. பின்னர் இந்த 147 யாககுண்டங்களில் 108 வகையான வேதிகை, மூலிகை, நறுமண திரவிய பொருட்களை சேர்த்து சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்கி பூர்ணாஹுதி செய்விக்கப்பட்டு அனைத்து யாக சாலைகளிலும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகன் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்ற பூஜைகளை தொடங்கிவைத்து தரிசனம் செய்தார். அப்போது திருநெல்வேலி கட்டளை மடம் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோவில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் சபாபதி தம்பிரான் ஸ்வாமிகளும் பங்கேற்று தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |