Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவி சீரியலில் இணைந்த ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட பதிவு…!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு சீரியலில் செம்பருத்தி சீரியல் நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த சீரியலில் அக்னி கதாநாயகனாகவும், ஷபானா கதாநாயகியாகவும்  நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் மித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை பாரத நாயுடு நடித்து வருகிறார். இவர் யாரடி நீ மோகினி, தேவதையை கண்டேன் ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர்.

Celebrity Hairstyle of Bharatha Naidu from Sembaruthi, Episode 623, 2019 |  Charmboard

இந்நிலையில் நடிகை பாரத நாயுடு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாரத நாயுடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 :30 மணிக்கு சன் டிவியில் ‘தாலாட்டு’ சீரியலை தவறவிடாதீர்கள். தொடர்ந்து ஆசீர்வதிக்கவும்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |