Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த விஷயத்தில் மட்டும்…. கட்டாயம் அலட்சியம் வேண்டாம் – நடிகை அஞ்சலி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடிகை அஞ்சலி, முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், கைகளை அடிக்கடி கழுவுங்கள், கொரோனா தொடர்ந்து நம்மை வேதனைப்படுத்தி வருகிறது. பலர் நெருங்கியவர்களை இழந்து நிற்கிறார்கள். கொரோனா விஷயத்தில் அலட்சியம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |