Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன்…. சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை… திரளான மக்கள் சாமி தரிசனம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி வீரமாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒணாங்குடி கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் தினமும் அம்மனுக்கு காலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் கொரோனா தொற்று காலம் என்பதால் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |