Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனீங்க… ஏக்கத்தில் இளம்பெண் எடுத்த முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் தனக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தில் சத்யா எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |