குளித்துக் கொண்டிருக்கும் போது தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 12-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜகோபால் நகரில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பரத் ஹரிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பரத் ஹரிஷ் தனது நண்பர்களுடன் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் ஹரிஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஹரிஷின் உடலை மீட்டனர். அதன்பின் ஏரல் காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.