Categories
உலக செய்திகள்

இளவரசர் விழாவிற்கு வருவாரா…? அடுத்தடுத்து எழுந்த கேள்விகள்… ராஜ குடும்ப பத்திரிகையாளரின் கருத்து…!!

இங்கிலாந்திற்கு இளவரசர் ஹரி தனது தாத்தாவினுடைய இறுதி சடங்கிற்கு சென்றபோது, அவரை முற்றிலுமாக ராஜ குடும்பத்தை சேர்ந்த சில நபர்கள் புறக்கணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டிற்கு இளவரசர் ஹரி தன்னுடைய தாத்தாவான இளவரசர் பிலிப்பினுடைய இறுதி சடங்கிற்கு அமெரிக்காவிலிருந்து வந்தார். இந்த நிலையில் இளவரசர் ஹரியினுடைய முகத்தைக் கூட பார்க்காமல் முற்றிலும் புறக்கணித்து இளவரசியான ஆன் உட்பட சில நபர்கள் இருந்ததால், அவர் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக ராஜ குடும்பத்தினுடைய பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தற்போது மற்றொரு முக்கியமான கேள்வி எழுந்தது. அதாவது கென்சிங்டன் மாளிகையில் ஜூலை 1ஆம் தேதி இளவரசி டயானாவினுடைய சிலை திறக்கவுள்ளது. இளவரசி டயானா உலகம் முழுவதும் நேர்மறை எண்ணத்தை அங்கீகரித்ததற்கும், டயானாவினுடைய 20 ஆவது நூற்றாண்டை பறைசாற்றும் வகையிலும் டயானாவின் சிலையை நிறுவப்படவுள்ளது.

இதனையடுத்து டையானாவினுடைய சிலையை இளவரசர்களான வில்லியமும், ஹரியும் சேர்ந்து நிறுவவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் தாத்தாவினுடைய இறுதி சடங்கில் இளவரசரான ஹரி புறக்கணிக்கப்பட்டுள்ளதால், அவர் அந்தச் சிலையினுடைய திறப்பு விழாவிற்கு வருவாரா என்கின்ற கேள்வி எழுந்தது. இந்த நேரத்தில் ஹரியினுடைய மனைவிக்கு பிரசவம் நடக்கவிருப்பதால் அதை காரணமாகக் காட்டி சிலை திறப்பு விழாவை புறக்கணிக்க வாய்ப்பிருப்பதாக ராஜ குடும்பத்தினுடைய பத்திரிக்கையாளர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |