16 வயது சிறுவன் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.எஸ். நகர் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமி நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர் 16 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.