Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணிக்கையை திருடிய மர்ம நபர்கள்…. காவல்துறை அதிகாரி ஆய்வு…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் கோவிலில் இருக்கும் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் ஆலமரத்து முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் அம்மனை தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்தநிலையில் அந்த உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் அதில் போடப்பட்டிருந்த காணிக்கை பணத்தை திருடி சென்றனர்.

இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அதனை ஆய்வு செய்ததோடு மட்டுமில்லாமல் விசாரணையையும் மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |