குடெமலாவில் நடந்த, உலக கோப்பை வில்வித்தை போட்டியில், இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.
வில்வித்தை போட்டியில் பெண்களுக்கான ‘ரிகர்வ்’ தனிநபர் பிரிவில் ,இந்தியாவை சேர்ந்த தீபிகா குமாரி மெக்சிகோவை சேர்ந்த அலிஜான்ட்ரா வாலென்சியாவுடன் மோதினார். இதில்7-3 என்ற கணக்கில் வாலென்சியாவை , தோற்கடித்து தீபிகா குமாரி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் தனிநபருக்கான பிரிவில் , தீபிகா குமாரி வென்றுள்ள 3வது தங்கப் பதக்கம் ஆகும். இதைத்தொடர்ந்து ஆண்களுக்கான தனிநபர் பிரிவு போட்டியில், இந்தியாவை சேர்ந்த அதானு தாஸ் , ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டேனியல் கேஸ்ட்ரோவுடன் மோதி, 6-4 என்ற கணக்கில் கேஸ்ட்ரோவை தோற்கடித்து ,முதல் முறையாக தங்கப்பதக்கத்தை வென்றார்.
எனவே இந்தப் போட்டியில் ,வெற்றி பெற்றதன் மூலமாக அதானு தாஸ்,தீபிகா குமாரி இருவரும் இந்த ஆண்டில் நடைபெறும், உலகக் கோப்பை இறுதித் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து தீபிகா குமாரி, அங்கிதா பாகத், கோமாலிகா பாரி ஆகியோர் பங்கேற்ற பெண்களுக்கான அணி பிரிவில் ,மெக்சிகோ அணி வீராங்கனைகளுடன் மோதி,5-4 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி ,இந்தியா தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது. அடுத்ததாக கலப்பு இரட்டையர் பிரிவில் அதானு தாஸ், அங்கிதா பாகத் ஜோடி அமெரிக்கா ஜோடியுடன் மோதி,6-2 என்ற கணக்கில் வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றது. எனவே உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ‘ரிகர்வ்’ பிரிவில் ,இந்தியா 3 தங்கப் பதக்கங்களை பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.