பிரான்சில் ராணுவ ஆட்சி அமைப்போம் என முன்னாள் ராணுவ அதிகாரி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் அரசியல் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பெரும் பகுதிகளை பிரித்து இஸ்லாமியவாதிகள் தங்கள் பகுதியாக மாற்றி பிரான்ஸை சிதைப்பதாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் பிரான்சில் உள்நாட்டுப் போர் ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ராணுவத்தின் முன்னாள் அதிகாரி Jean-Pierre Fabre-Bernadac அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ராணுவத்தில் எங்களுக்கு பெரும் ஆதரவு இருப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பு மீது கவனம் செலுத்தும் அரசியல்வாதிகளுக்கு எங்கள் ஆதரவை தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து இந்த கடிதத்திற்கு 20 ஜெனரல்கள், 80 ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் சாதாரண நிலையில் இருக்கும் 1000 ராணுவத்தினர் கையெழுத்திட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து பிரான்ஸில் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய Marine Le Pen முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதனால் ஆளுங்கட்சியினர் அவர் மீது மிகுந்த ஆத்திரம் அடைந்துள்ளனர். மேலும் அந்தக் கடிதத்திற்கு ராணுவ அமைச்சரான Florence Parly கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி ராணுவம் என்பது நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்கே என கூறிய அவர் ராணுவத்தினரை வைத்து அரசியல் செய்ய கூடாது எனவும் கூறியுள்ளார். மேலும் ராணுவத்தில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் நடுநிலையுடன், உண்மையுடனும் இருப்பதே ராணுவத்தின் முக்கியத்துவம் என Florence Parly தெரிவித்துள்ளார். இதனையடுத்து Le Pen இத்தகைய செயலுக்கு ஆதரவளித்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.