கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாமலை காவல் நிலையத்தில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் நோட்டமிட்டனர்.
இதனை அடுத்து அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.