ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் 134 பேருக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் 27500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கபட்டபோது மாவட்டம் முழுவதும் போலீசாரால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் அங்கு உள்ள மக்கள் முழு ஊரடங்கை விதிமுறைகள் படி சரியாக கடைபிடித்தனர்.
மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் 134 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்மூலம் 27500 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதனையடுத்து இருசக்கரவாகனத்தில் சுற்றி திரிந்தவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால் யார் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.