புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள எலக்ட்ரானிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மணிமேகலை என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் மோகன்ராஜின் தாத்தா இறந்து விட்டதால் இறப்பு காரியத்தின் இறுதி ஊர்வலத்தில் மோகன்ராஜ் குடித்துவிட்டு ஆடியதை மணிமேகலை கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனவேதனை அடைந்த மணிமேகலை அறையினுள் சென்று கதவை பூட்டி விட்டு துப்பட்டாவால் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாமியார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிமேகலையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.