Categories
கிரிக்கெட் விளையாட்டு

Breaking: தமிழக வீரர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி….!!!!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திறந்து கொண்டு இருப்பவர் நடராஜன். அவர் கடந்த சீசனில் ஏராளமான ஏக்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் திக்குமுக்காட செய்தவர். அதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று தொடர்களிலும் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் காத்திருந்தன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. மூன்று போட்டிகளிலும் நடராஜன் இடம்பெறவில்லை.

அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் விளையாடவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்ற தமிழக வீரர் நடராஜன் ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய நடராஜன் காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் காயம் முழுமையாக குணம் ஆகாததால் மீதமுள்ள போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார்.

இந்நிலையில் அவர் முழங்கால் அறுவை சிகிச்சை இன்று செய்து கொண்டார். தனக்கு அறுவை சிகிச்சை அளித்து உதவிய மருத்துவக் குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பிசிசிஐ மற்றும் என்னுடன் துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |