பூட்டிய பழக்கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் கோச்சடை பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் எச்.எம்.எஸ் காலனியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது ரூபாய் 4000 பணம் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.