Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு…. கோடை மழை பிச்சி எடுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த சில  நாட்களாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஓரம் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 28 முதல் மே 1ஆம் தேதி வரை நீலகிரி, தேனி, கோவை, தென்காசி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதர மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |