சலூன் கடைகளை திறக்க கோரி முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது. இதனால் தமிழக அரசு அத்தியாவசிய மற்ற கடைகளை மூடக்கோரி உத்தரவிட்டுள்ளது. இதில் சலூன் கடைகளும் அடங்கும் என்பதால் முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் ஒரு மனுவை எழுதி உள்ளனர்.
அதில் “எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பகுதி நேரமாவது சலூன் கடைகளை திறக்க அனுமதி வேண்டும். இல்லையென்றால் நாங்களும் எங்கள் குடும்பமும் மிகுந்த மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்” என கூறியுள்ளனர். இந்த மனுவை அவர்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் கொடுத்துள்ளனர்.