Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட்டை குஜராத்துக்கு கொண்டு போயிடுங்க…. தொல்லை விட்டது….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டியது அரசின் நோக்கமல்ல என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.

இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வேதாந்தா நிறுவனத்தின் வேறு எந்த ஒரு ஆதாயத்திற்காகவும் கிடையாது என விளக்கம் அளித்துள்ளனர் நீதிபதிகள்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜனை முழுமையாக தமிழகத்திற்கு கொடுக்க முடியாது. மத்திய அரசுதான் பிரித்தே விநியோகிக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது. இதை கடுமையாக விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அருணன், “ஸ்டெர்லைட்டை குஜராத்திற்கு கொண்டு போயிடுங்க. தொல்லை விட்டது” என்ற ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |