Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது என்ன கருப்பு கலர்ல இருக்கு… அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… விவசாயிகளின் கோரிக்கை…!!

அமராவதி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் கருப்பு நிறத்துடன் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்வரத்தை ஆதாரமாக கொண்டு கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன. இந்நிலையில் அமராவதி ஆறு மற்றும் பிற கால்வாய்கள் மூலம் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கருப்பு நிறத்தில் வெளியேறுவதுடன், கடுமையான துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடும் துர்நாற்றத்துடன் கருப்பு நிறத்தில் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அதனை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவ்வாறு துர்நாற்றம் வீசும் தண்ணீரை வயல்வெளிகளுக்கு பாய்ச்சுவதால், அங்கு வேலை செய்யும் விவசாயிகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அசுத்தமடைந்த தண்ணீரில் வளரும் மீன்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே அமராவதி அணை பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீரை ஆய்வு செய்து அதனை சுத்திகரிப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |