விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று பணித்திறமையை வளர்த்துக் கொள்வதால் நன்மைகள் உண்டாகும்.
தொழில் உற்பத்தி அளவில் சராசரியளவு இருக்கும். பணிச்சுமை கூடும். உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சம்பந்தமாக செலவுகள் உண்டாகும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொத்து வாங்குவது மற்றும் விற்பது போன்றவை லாபகரமாகவே இருக்கும். வியாபாரத்தில் புதிய உத்திகளை நீங்கள் கையாளுவீர்கள். லாபம் உங்களிடம் வந்துச்சேரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். விட்டுக்கொடுத்து சென்றால் முன்னேற்றம் அதிகரிக்கும். அனைவராலும் புகழப்படும் விதத்தில் நடந்துக் கொள்வீர்கள். இந்த மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றகரமான நாளாக இருக்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொண்டு வேலையை செய்து வாருங்கள், அந்த வேலை நல்லபடியாக முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் இளம்பச்சை நிறம்.