Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி பலி..!!!

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழந்தனர்.

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை பிள்ளையார் கோவில்பட்டி அருகே உள்ள சித்தம்பட்டி பகுதியை சேர்ந்த தர்மன் (வயது 30) டிரைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி ஜான்சிராணி வயது 25 என்பவர் ஆவார். இவர்கள் தனது வீட்டின் அருகே  துணிகள் காயப்போடுவதற்க்காக கம்பியாலான கொடியைக் கட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று காற்றானது அதிவேகமாக வீசியதில் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வயர் கொடி கம்பி மீது உரசியது. இது தெரியாமல்  ஜான்சிராணி அவர்  காயப்போட்ட துணியை எடுத்துள்ளார்.

Image result for dead body

 

அப்போது அவரை மின்சாரம் தாக்கி அலறி துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட தர்மன் காப்பாத்த சென்ற போது அவரையும் மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவர இடத்திலேயே உயிரிழந்தனர். இதை பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார்  சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |