திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிமந்தையத்தில் கலப்பு திருமணங்களை பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளரை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிமந்தையத்தில் தமிழ் புலிகள் சார்பில் கலப்பு திருமணங்களை பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சின்னக்கருப்பன் தலைமை தாங்கினார்.
மேலும் சார் பதிவாளரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். அதில் மண்டலச் செயலாளர் மருதை திருவாணன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் மணி, மாவட்ட துணை செயலாளர் முருகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.