திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 199 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவத்தினர், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், காவல்துறையினர் என மொத்தம் 300-க்கும் மேற்பட்டோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் பீகார் மாநிலத்திலிருந்து வந்த மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்பின் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 199 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 62 பேர் பெண்கள் ஆவர். இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 187 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்றிற்கு 1,585 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.