Categories
டென்னிஸ் விளையாட்டு

இஸ்தான்புல் டென்னிஸ் போட்டி: ருமேனியா வீராங்கனை சிா்ஸ்டி…கோப்பையை வென்று சாதனை !!!

இஸ்தான்புல் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது துருக்கியில் நடைபெற்றது.

இந்த வருடதிற்கான  இஸ்தான்புல் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது, துருக்கியில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் ,ருமேனியா நாட்டை சேர்ந்த உலகின் 67 வது நிலையில் உள்ள  வீராங்கனை சிா்ஸ்டி, 17வது நிலையிலுள்ள பெல்ஜியம் நாட்டை சேர்ந்த எலிஸ் மொடன்ஸுடன் மோதினார்.

இதில் சிா்ஸ்டி 6-1, 7-6 (7/3) என்ற செட் கணக்கில், எலிஸ் மொடன்ஸை  வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்தப் போட்டியில் 3 முறை எலிஸ் மொடன்ஸுடன் மோதிய சிா்ஸ்டி, அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.இவர் கடந்த 2008ஆம் ஆண்டு,  தன்னுடைய முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை தாஷ்கன்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |