Categories
மாநில செய்திகள்

இந்து பெண்ணின் உடலை வாங்க மறுத்த குடும்பம்… தகனம் செய்த இஸ்லாமிய வாலிபர்… வைரலாகும் செய்தி….!!

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நபர் இந்து பெண்ணின் உடலை எடுத்து தகனம் செய்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அதிவேகமாக பரவி கொண்டு வருவதால் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் 58 வயது உள்ள ஒரு இந்து பெண் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் திடீரென்று இறந்து விட்டதால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர். அதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் அவர் இறந்ததற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

இந்நிலையில் அவர் இறந்ததாக கூறி மருத்துவர்கள் அவரது உடலை அவரின் கணவர் மற்றும் பிள்ளைகளிடம் ஒப்படைப்பதற்காக ஆம்புலன்ஸில் வைத்துள்ளனர். ஆனால் அந்த பெண்ணின் கணவரும் மகன்களும் தனது தாய்க்கு கொரோனாவாக இருக்குமோ என்ற சந்தேகத்தின்பேரில் உடலை வாங்க மறுத்துள்ளனர். இதனால் 8 மணி நேரமாக அந்த பெண்ணின் உடல் ஆம்புலன்ஸிலேயே இருந்துள்ளது.

இதனை பற்றி தகவல் அறிந்ததும் சமூக சேவகரான ஷரிக் தனது நண்பர்களுடன் சென்று அந்த பெண்ணின் உடலை வாங்கி அருகில் உள்ள மயானத்தில் தகனம் செய்வதற்காக கொண்டு சென்றுள்ளார். இதனைக் கண்ட  அந்த இந்து பெண்ணின் குடும்பத்தினர் தான் செய்த தவறை உணர்ந்து இறுதியில் சமூக சேவகரான ஷரிக் உடன் இணைந்து அந்த தாயின் இறுதிச் சடங்கை செய்துள்ளனர். ஷரிக் என்பவர் ஒரு முஸ்லிம் ஆவார். ஆனால் இந்த சமயத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |