Categories
உலக செய்திகள்

தங்கையின் பிறந்த நாளை மறந்து அண்ணன்…. எவரும் எதிர்பார்க்காத பரிசு…. ஒரே நாளில் தங்கையின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம்….!!!

அமெரிக்காவில் தங்கையின் பிறந்த நாளை மறந்த பிறகு தங்கைக்கு அண்ணன் அளித்த மறக்க முடியாத பரிசு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது .

அமெரிக்காவில் Elizabeth Coker-Nnam என்ற பெண்ணும் இவரது அண்ணனும் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு எலிசபெத் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதில் எலிசபெத்தின் நண்பர்கள் பலர் அவருக்கு பரிசுகள் வழங்கி மகிழ்வித்தனர். ஒவ்வொரு பிறந்த நாளையும் மறக்காமல் தனது தங்கைக்கு பரிசு வழங்கி வந்த அண்ணன் இந்த பிறந்த நாளை எப்படியோ மறந்துவிட்டார்.

அதன் பிறகு சில நாட்களுக்கு முன்பு நியாபகம் வரவே எலிசபெத் இடம் மன்னிப்பு தெரிவித்து எலிசபெத்திற்கு அவசரகதியில் ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கி பரிசாக அவருக்கு கொடுத்துள்ளார். தங்கை எலிசபெத்தும் அதனை அன்புடன் ஏற்றுக் கொண்டார். மேலும் அந்த லாட்டரி டிக்கெட்டை அவர் மறந்து போய் விட்டார்.

இதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு அண்ணனும் தங்கையும் செல்போனில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது திடீரென அண்ணன் எலிசபெத்திடம் அவர் பரிசாக வழங்கிய லாட்டரி டிக்கெட்டை பற்றி விசாரித்தார்.  அதனை தான் மறந்து போய்விட்டதாக கூறி  அதனை தேடி எடுத்துள்ளார்.  அந்த டிக்கெட் குறித்து பரிசோதனை செய்து பார்த்தபோது இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அந்த டிக்கெட் எண்ணிற்கு 500000 டாலர் பரிசாக விழுந்துள்ளது. இதனை அறிந்த அண்ணன் தங்கை இருவரும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர். அண்ணனின் சிறிய பரிசில் தங்கை ஒரேநாளில் கோடீஸ்வரியானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எலிசபெத் தனது அண்ணனுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்தார்.

அதற்கு அண்ணன் இது தெரிந்திருந்தால் டிக்கெட்டை கொடுக்காமல் நானே வைத்திருப்பேன் என்று வேடிக்கையாகக் கூறினார். எலிசபெத் கவலைப்படாதீர்கள் உங்கள் பிறந்த நாளிற்கு இதைவிட மறக்கமுடியாத பரிசாக நான் அளிக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த பரிசுத்தொகை எவரும் எதிர்பாராத விதமாக  அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |