Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அதிவேகம் மிக ஆபத்து… ஆசிரியருக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பேடு கிராமத்தில் காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காந்தி தனது மோட்டார் சைக்கிளில் கும்மிடி பூண்டியில் இருந்து செங்குன்றம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவரின் மோட்டார்சைக்கிள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக பின்புறம் வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட காந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த கவரைப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |