இளம்பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட குளத்துமேடு பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த இளம் பெண் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள முட்புதருக்கு அருகே சென்றபோது அவ்வழியாக வைரவன் குப்பம் கிராமத்தில் வசிக்கும் பன்னீர் என்ற வாலிபர் சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் இளம் பெண்ணை தாக்கியதோடு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து விட்டனர்.
மேலும் அந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அந்த இளம்பெண் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பிடிபட்ட அந்த வாலிபரை பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொன்னேரி அனைத்து மகளிர் காவல் துறையினர் அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.