இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியாவின் நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் ஜனார்த்தனன் என்ற மாற்றுத்திறனாளி ஒருவர் தான் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த ரூ.2 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். பீடி தொழிலாளியாக இருக்கும் இவர் ரூ.850 மட்டும் வங்கிக்கணக்கில் வைத்துவிட்டு மீதியை வழங்கியுள்ளார். இந்த நெகிழ்ச்சி சம்பவத்திற்கு நன்றி தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.