Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஆரி… வெளியான செம மாஸ் தகவல்…!!!

நடிகர் உதயநிதியின் படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஆரி. இவர் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார் . தற்போது ஆரி பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் படத்தில் ஆரி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடித்து வருகிறார். அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |